குடியாத்தத்தில் மாற்றுத் திறனாளிகளுக் கான சிறப்பு முகாம் மாற்றுத் திறனாளிக ளுக்கான நல அலுவலர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 அக்டோபர், 2026

குடியாத்தத்தில் மாற்றுத் திறனாளிகளுக் கான சிறப்பு முகாம் மாற்றுத் திறனாளிக ளுக்கான நல அலுவலர் பங்கேற்பு !

குடியாத்தத்தில் மாற்றுத் திறனாளி
களுக்கான சிறப்பு முகாம் மாற்றுத் திறனாளிகளுக்கான நல அலுவலர் பங்கேற்பு !
குடியாத்தம், அக்டோபர் 11
வேலூர் மாவட்டம், குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள கரிகிரி மருத்துவ மனையில், மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நலத்துறை மற்றும் சென்னையைச் சேர்ந்த அலிம்கோ நிறுவனம் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகா மிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ். பாபு தலைமை தாங்கி னார். மாற்றுத்திறனாளிகள் நல அலு வலக இளநிலை உதவியாளர் இனியன் முன்னிலை வகித்தார் முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான சக்கர நாற்காலிகள், காதொலிக் கருவிகள் மற்றும் ஊன்றுகோல்கள் வழங்கப் பட்டன.இந்நிகழ்ச்சியில் கே.வி. குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தென்றல் குமார் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உபகரணங் களை வழங்கினார். இந்தச் சிறப்பு முகா மில் கே.வி. குப்பம், குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானமாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad