குருவராஜபாளையம் தர்மகொண்ட ராஜா ஶ்ரீ வெங்கடேச பெருமாள் திருக் கோயிலில் 7,000 பக்தர்களுக்கு அன்ன தானம்!
குடியாத்தம். அக்டோபர் 11-
வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அருகி லுள்ள குருவராஜபாளையம் அருள்மிகு தர்மகொண்ட ராஜா ஶ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில், புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை முன்னி ட்டு சுமார் 7,000 பக்தர்களுக்கு அணைக் கட்டு சட்டமன்ற உறுப்பினரும், வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரு மான வேலழகன் அவர்கள் அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியாத்தம் நகரக் கழகச் செய லாளர் ஜே.கே.என். பழனி, மாவட்டத் துணைச் செயலாளர் கஸ்பா மூர்த்தி, சேட்டு, ராமமூர்த்தி உள்ளிட்டோர் திருக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து சிறப்பித்தனர்.பக்தர்களின் ஆன்மிக உணர்வைப் போற்றும் வகையிலும், பசியாற்றும் சேவையை முன்னிறுத்தும் வகையிலும் நடைபெற்ற இந்நிகழ்வு அனைவரது பாராட்டையும் பெற்றது.
அன்னதானம் என்பது உணவளிக்கும் சேவை மட்டுமல்ல; அன்பையும் மனித நேயத்தையும் பகிர்ந்தளிக்கும் மகத்தான தொண்டாகும்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக