குடியாத்தத்தில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட ஆய்வுக் கூட்டம்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட ஆய்வுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பி.பிரித்திவிராஜன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் தி. மைக்கேல் தாஸ், மாநிலப் பொருளா ளர் கே.பி. சரவணன், மாநில ஒருங்கி ணைப்பாளர் பி.டி. சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்ட மாநிலத் துணைத் தலைவர் வி.கே. வெங்கட், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எஸ். ஸ்டீபன் ராஜ், தலைமை நிலையச் செயலாளர் ஆர். முத்துகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் கிளை நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக