பேர்ணாம்பட்டு இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் கிளை அமைப்பு மற்றும் அதன் மேலாண்மை குழு சார்பில், தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டிச் சிறப்பிக்கும் விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, விருது பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி வாழ்த்துத்ரை வழங்கினார்.
ம.பத்மநாபன் பொறுப்புத் தலைமை ஆசிரியர், எருக்குமப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி இந்தியன் செஞ்சிலுவைச் சங்கத்தின் பேர்ணாம்பட்டு கிளை மேலாண்மை குழு உறுப்பினருமான இவர், கல்விச் சேவையில் சிறந்த பங்களிப்புக்காகவும், தாம் பணிபுரியும் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் 100% தேர்ச்சியும், தனது பாடத்தில் 12 ஆண்டுகள் 100% தேர்ச்சி பெறச் செய்த முதன்மைக் காரணமாகத் திகழ்ந்ததற்காகவும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்று கெளரவிக்கப்பட்டுள்ளார்.
இளா. ஹரிஹரன் ஆசிரியர், பெரியதாமல் செருவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இப்பள்ளியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருவதற்காக டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளமைக்காக இவ்வறிவிப்பில் பாராட்டிப் போற்றப்படுகிறார்.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக