குடியாத்தம் காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி முதல் நாள் கடஸ்தாபன ஊர்வலம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 அக்டோபர், 2026

குடியாத்தம் காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி முதல் நாள் கடஸ்தாபன ஊர்வலம் !

குடியாத்தம் காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி முதல் நாள் கடஸ்தாபன ஊர்வலம் !
குடியாத்தம், அக்டோபர் 11 -
          வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடுப் பேட்டை பகுதியில், கண்ணகி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வகர்மா சமூகத் திற்குச் சொந்தமான அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில், நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு கடஸ்தாபன ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.
குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை, ஆண்டியப்பா ஆச்சாரி தெருவில் இருந்து செண்டை மேளங்கள் முழங்க கடஸ் தாபன ஊர்வலம் கோலாகலமாகத் தொ டங்கியது. தொடர்ந்து, முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம், இறுதியாக ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தை வந்தடைந் தது. இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மன்றத் தலைவர் எஸ். சௌந்தர்ராஜன், சித்தர் சாமிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad