முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சுமார் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாநிலம் தழுவிய அறப்போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன அறப்போராட்டம் நடைபெற்றது.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது போர் நடவடிக்கைகள் காரணமாக மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்ற தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், அப்போதே லண்டன் பிரிவூ கவுன்சில் இந்துக்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு அளித்தது. தொடர்ந்து 1923 முதல் 2026 வரை திருப்பரங்குன்றம் மலை உரிமை மற்றும் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளிலும், தர்கா உள்ள பகுதி மலை முழுவதும் முருகனுக்கே சொந்தம் என்றும், மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்றும் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.
இன்றைய அறப்போராட்டத்திற்கு கடலூர் மாவட்டத் தலைவர் S.சக்திவேல் தலைமை தாங்கினார் மாவட்டத் துணைத் தலைவர் M.கார்த்திக் வரவேற்புரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர்கள் V.வெங்கடேசன், K.மணிகண்டன், S.சரவணன் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் V.பிச்சை பிள்ளை, D.பெருமாள், K.ரவிச்சந்திரன், D.பெருமாள் D.பெரியசாமி U.திவாகர், M.K.B.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட இந்து முன்னணியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர்
அவா சனில்குமார் கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர்
நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தி தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்காமல், தீபம் ஏற்ற வந்த பக்தர்கள் மீது அடக்குமுறையைக் கையாள்வது முருக பக்தர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். தற்போதைய அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து பக்தர்களை வஞ்சித்து வருகிறது. எனவே, உடனடியாக தமிழக அரசு நீதிமன்றத் தீர்ப்பை மதித்து திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிட வேண்டும்" என வலியுறுத்தினார்
இப்போராட்டத்தின் நிறைவாக கடலூர் நகரச் செயலாளர் J.சிவகுமார் நன்றியுரையாற்றினார். இதில் திரளான முருக பக்தர்களும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்
P ஜெகதீசன்
தமிழக குரல்
கடலூர் மாவட்ட
இணையதள செய்தி பிரிவு
மாவட்ட ஒளிப்பதிவாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக