வள்ளலார் பாடல்களை பாடியவாறு மனமுருக சாமி தரிசனம் மேற்கொண்ட நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 அக்டோபர், 2026

வள்ளலார் பாடல்களை பாடியவாறு மனமுருக சாமி தரிசனம் மேற்கொண்ட நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்.


கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டார் 

கடந்த ஆண்டு வள்ளலார் பிறந்தநாள் முன்னிட்டு சபை வளாகத்தில் நடைபெற்ற இசை விழாவில் வள்ளலார் பாடல்களை பாடிய புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு தமிழக அரசு அண்மையில் இயல் இசை நாடக மன்ற தலைவராக பொறுப்பு வழங்கியது இதனைத் தொடர்ந்து அவர் பொறுப்பேற்றதும் முதல்முறையாக வள்ளலார் சத்திய ஞான சபையில் சாமி தரிசனம் மேற்கொண்டார் சத்திய ஞான சபை வளாகத்தில் தியானம் மேற்கொண்ட அவர் தொடர்ந்து வள்ளலார் தர்ம சாலையில் வள்ளலார் பாடல்களை பாடியவாறு வழிபாடு மேற்கொண்டார் 
பின்னர் பசிப்பிணியை போக்க வள்ளலார் இயற்றிய அணையா அடுப்பு மற்றும் தர்மச்சாலையில் உள்ள அன்னதான கூடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் 
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவராக என்னை நியமித்த பிறகு முதல் முறையாக வள்ளலார் சத்திய ஞான சபையில் சாமி தரிசனம் மேற்கொள்கிறேன். 

வள்ளலாரின் அருளால் எனக்கு இந்த பதவி கிடைத்திருக்கிறது நான் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றி வருகிறேன் 
வள்ளல் பெருமானின் பாடல்கள் சுமார் 50 பாடல்களை 50 லட்சம் ரூபாய் செலவில் பதிவு செய்து வைத்துள்ளேன் அதனை அரசிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளேன் அந்தப் பாடல்கள் அனைத்தையும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒலிக்க செய்ய வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளேன்.

 சுத்த சன்மார்க்கத்தின் சிறப்பையும் பெருமையும் சுத்த சன்மார்க்க வழி நடப்பதால் மனித குலத்திற்கு உண்டாகும் நன்மையும் இந்த பாடல்கள் மூலம் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்

மேலும் தேசிய கீதத்தை இசை கற்றுக் கொள்ளாத அனைத்து மக்களைளும் பாடுவது போல் வள்ளலாரின் அகவல் பாராயணமும் திருவருட்பாவின் இரண்டாம் திருமுறைகள் உள்ள கொடி விண்ணப்ப மாலை ஒன்று தோள் என்ற பதிமுகமும் அனைவரும் பாட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

D.தனுஷ்
குறிஞ்சிப்பாடி செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad