பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வி.அலம்பலம் கிளையில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2026

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வி.அலம்பலம் கிளையில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், வி.அலம்பலம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வி.அலம்பலம் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சின்னசேலம் வட்டம் வி.அலம்பலம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கிளை செயலாளர்எம்.ராமசாமி தலைமை தாங்கினார்.

வி.அலம்பலம் ஆதி திராவிடர் மயான பாதைக்கு மின்விளக்கு போர்வெல் மினி டேங்க் அமைத்து தர வேண்டும்.
விருத்தாசலம் செல்லும் மெயின் ரோட்டில் இருந்து வீரபயங்கரம் செல்லும் சாலை வரை இருட்டாக உள்ள சாலையில் மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

வி.அலம்பலத்திலிருந்து கிருஷ்ணாபுரம் ஏரி வழி வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து தர வேண்டும்.

ஆதி திராவிடர் பகுதியில் அரச மரம் அருகே போர்வெல் அமைத்து மினி டேங்க் அமைக்க வேண்டும்.

இந்திரா காலனியில் போர் அமைத்து மிக நீண்ட நாள் நிறுத்தி வைத்துள்ளதை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும்.
அரசு பள்ளியில் பழுதடைந்த போர் வெல்லை சரி செய்ய வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாக 
மாவட்ட செயற்குழு பி.சுப்பிரமணியன்,வட்ட செயலாளர் டி.மாரிமுத்து,பட்டக்குழு பி.பழனி,ஆர். பாபு,எல்.ராமசாமி,கே.சுதா,வி.ஆறுமுகம்,
முத்துசாமி,மகேஸ்வரி,சாந்தி,கணேசன்,செல்வி,ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் இதில் ஏராளமான கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad