கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சூப்பர் எல்நினோ வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சூப்பர் எல்நினோ வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்.


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதில் கள்ளக்குறிச்சி வட்டத்தில் சூப்பர் எல் நினோ புயல் காரணமாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட கரும்பு, மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, நெல் மற்றும் இதர பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25,000 வறட்சி நிவாரணம் வழங்கக் கோரியும்,

வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாகவே வட்டத்தில் உள்ள அணைகள், ஏரிகள், நீர்நிலைகள், வடிகால் வாய்க்கால்களை தூர்வாரக் கோரியும்,

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு வட்டத் தலைவர் பி.மணி தலைமை தாங்குகிறார். மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மாவட்டத் தலைவர் விளக்க உரையாற்றினார்.
இதன் தொடர்ச்சியாக உளுந்தூர்பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட பொருளாளர் எம். வி.ஏழுமலை தலைமையில் நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்தில் மாவட்டத் தலைவர் ஏ.வி.ஸ்டாலின் மணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் வட்டச் செயலாளர் பி.தெய்வீகன், மாவட்ட துணைச் செயலாளர் ஜி.அருள்தாஸ், வட்ட பொருளாளர் ஜி.அய்யப்பன், வட்ட துணைத் தலைவர் ஏ.வெங்கடேசன் உள்ளிட்ட வட்டக்குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுவினை அளித்தனர் இதை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உடனடியாக வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கீடு செய்து இழப்பீடு வழங்குவதாக கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad