குழந்தைகளின் தனித்திறன்களை வளர்த்தல், பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவித்தல் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் டாக்டர் அம்ருதா ஆனந்த் மற்றும் கலாமண்டலம் சித்ரா விஸ்வம் இணைந்து தொடங்கிய புதிய கலை மற்றும் பண்பாட்டு மையம்.
மேதமை என்பது ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை.”
ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் தனித்துவமான திறமை, ஆர்வம் மற்றும் சாதிக்கும் ஆற்றல் இயல்பாகவே அமைந்துள்ளது. ஆனால், அவற்றை அடையாளம் காணவும், வெளிப்படுத்தவும், வளர்த்தெடுக்கவும் தேவையான வாய்ப்புகளும் வழிகாட்டுதல்களும் எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை.
இந்த நிலையை மாற்றி, ஒவ்வொரு குழந்தையின் உள்ளார்ந்த திறனையும் வெளிக்கொணரும் உயரிய நோக்கத்துடன், ‘அமேசிங் பெர்க் கலை மற்றும் பண்பாட்டு மையம்’ (Amazing Perk Cultural Centre) துபாயில் தொடங்கப்பட்டுள்ளது.
டாக்டர் அம்ருதா ஆனந்த் மற்றும் கலாமண்டலம் சித்ரா விஸ்வம் ஆகியோரால் நிறுவப்பட்ட இம்மையத்தின் திறப்பு விழா, 2026 அக்டோபர் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, துபாய் அல் கைல் கேட், இரண்டாம் கட்டம், கட்டிடம் 3-3-இல் சிறப்பாக நடைபெற்றது.
“திறமையைக் கண்டறிவோம்; தனித்துவத்தை வளர்ப்போம்; சாதனையாளர்களாக உயர்வோம்” (Discover Talent. Build Identity. Become Extraordinary) என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இம்மையம் செயல்படுகிறது.
நடனம், இசை, நுண்கலைகள், யோகா, படைப்பாற்றல் பயிற்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் வாயிலாகக் குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தி, தன்னம்பிக்கையுடனும் தனித்துவமான ஆளுமையுடனும் வளர வழிவகுப்பதே இம்மையத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திறப்பு விழாவில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முக்கிய விருந்தினர்களாக, துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேதகு ஷேக் ஜுமா பின் மக்தூம் அல் மக்தூம் அவர்களின் அலுவலக நிர்வாக இயக்குநரும் தனிப்பட்ட ஆலோசகருமான திரு. யாகூப் அல் அலி (Yaqoob Al Ali), துபாய் காவல்துறை அதிகாரியும் சர்வதேச ஒலிம்பிக் கைப்பந்து நடுவர் மற்றும் பார்வையாளருமான மேஜர் உமர் அல் மர்சூகி (Major Omar Almarzooqi), காவல்துறை தலைமையகத்துடன் தொடர்புடைய டாக்டர் சாலே பெல்ஹஜல் (Dr. Saleh Belhajal), சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. எம். எஸ். முஸ்தபா, அமீரகக் கலைஞரும் தொழிலதிபருமான திரு. அகமது அல் அவாதி, அமீரக நடிகர் திரு. அப்துல்லா அல் ஜஃபாலி, துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்தின் (DEWA) நிர்வாக இயக்குநர் திரு. சயீத் இஸ்மாயில் ஆகியோர் இடம்பெற்றனர்.
மேலும், தோஹா வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் ஆர். சீதாராமன், DKazan Legal Consultant நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் சட்ட ஆலோசகருமான திருமதி டானியா கசான், Rukn குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ராபின்சன், Vintron குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. வினோத் நம்பியார், Anwar குழுமத்தின் தலைவர் திரு. அன்வர், Farm Basket நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் The Rise Dubai அமைப்பின் தலைவருமான திரு. வலசை ஃபைசல், Iman Cultural Center பொதுச் செயலாளர் திரு. ஹமீத் யாசின், ASP Auditing நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஏ. எஸ். இளவரசன் (பிரின்ஸ்), AES Edu Marketing Events Network FZE நிறுவனர் திருமதி ஆயிஷா ஷேக், Best Choice Testing Service நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி உமா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக இடம்பெற்றனர்.
தொழில்முனைவோர், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் பங்கேற்பு
இந்நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோரும் சமூகப் பிரமுகர்களும் பங்கேற்றனர்.
Mandarawi குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு. மஹ்மூத் மண்டராவி, Recall Media & Dubai Darbar நிறுவனர் திரு. அப்துல் ஹமீத், Dubai Darbar நிறுவனர்- Kabir, வளைகுடா முதன்மை நெறியாளர் Kamal Kvl & ATS நிறுவனர் - Shelu, Neharika Tours & Travels நிறுவனர் திருமதி சாரிகா நேஹல் பாரிக், சட்ட ஆலோசகர் திரு. அர்ஷத் மாலிம், Media Vibes FZC நிர்வாகப் பங்குதாரர் திருமதி ஸ்மிதா வினோத், Tamilbuzz இணை நிறுவனர்கள் திரு. சுரேஷ் மற்றும் திரு. ஷாஹுல், VR Worldwide நிறுவனர் திரு. ரஞ்சித், Aroma 365 நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. சதாம், Pleasant Tourism நிறுவனர் திரு. மஜிதா ஆகியோர் இடம்பெற்றனர்.
மேலும், Madras Beats நிறுவனர் திருமதி ரம்யா சேதுராம், வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நிறுவனருமான ஆர்.ஜே. மாயா, Smart Brothers Corporate நிறுவனர் திரு. அப்துல் காதர், Katral Education நிறுவனர் திருமதி ரோகிணி, Dazzle Berry நிறுவனர் திரு. சரவணன், 2FA நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. ஷஹீத் ரஹ்மான், தணிக்கையாளர் மற்றும் நிதி ஆலோசகர் திரு. கரண் ரத்தினம், Chithirai இணை நிறுவனர் திருமதி ரோஜினி, Media Waves இயக்குநர்கள் திருமதி டானியா ஹுசைன் மற்றும் திரு. தஸ்வீர் எம். சலீம், வங்கித் துறை ஆலோசகர் திரு. முத்துக்குமார், Tamil Mart நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. கங்காதரன், தகவல் தொழில்நுட்ப நிபுணர் திரு. பஹாருதீன், Flytamizah நிறுவனத்தைச் சேர்ந்த திரு. தினேஷ், AimNxt நிறுவனத்தைச் சேர்ந்த திருமதி ரம்யா, BAB Al Madina Garments விற்பனை மேலாளர் திரு. லியோ உள்ளிட்டோரும் இவ்விழாவில் இடம்பெற்றனர்.
இரண்டு தாய்மார்கள் – ஒரே கனவு!
அமேசிங் பெர்க் கலை மற்றும் பண்பாட்டு மையம் உருவானதன் பின்னணியில், இரண்டு தாய்மார்களின் அனுபவங்களும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த ஒருமித்த சிந்தனையும் அமைந்துள்ளன.
இம்மையத்தின் இணை நிறுவனர் டாக்டர் அம்ருதா ஆனந்த், யோகத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்; சர்வதேச யோகா நிபுணர், பன்முறை உலக சாதனையாளர் மற்றும் 43 யோகா சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்.
சிறுவயதில் மேடை அச்சத்தை எதிர்கொண்ட அவர், தொடர்ந்து பெற்ற பயிற்சி, வாய்ப்புகள் மற்றும் முயற்சிகளின் மூலம் சர்வதேச அளவில் சாதனையாளராக உயர்ந்துள்ளார்.
தனது மகள் போதினி ஸ்ரீ, இசை, நடனம், கலை, யோகா உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் சிறுவயதிலேயே அறிந்து, தனக்குப் பிடித்த திறனைத் தேர்ந்தெடுத்து வளர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. இரண்டு வயதிலேயே போதினி ஸ்ரீ இரண்டு உலக சாதனைகளைப் படைத்திருப்பது, சிறுவயதிலேயே சரியான வாய்ப்புகளையும் ஊக்கத்தையும் வழங்குவதன் முக்கியத்துவம் குறித்த அவரது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
மற்றொரு இணை நிறுவனரான கலாமண்டலம் சித்ரா விஸ்வம், தொழில்முறை நடனக் கலை ஆசிரியர் ஆவார். கலைப் பயிற்சிகள் குழந்தைகளின் தன்னம்பிக்கை, ஒழுக்கம், படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான அடையாளத்தை எவ்வாறு வளர்க்கின்றன என்பதைத் தனது கற்பித்தல் அனுபவத்தின் மூலம் உணர்ந்தவர்.
அவரது மகன் இஷான், தனது 14 வயதிலேயே தனித்துவமான மெழுகுவர்த்திகள் தயாரிப்பதில் கொண்டிருந்த ஆர்வத்தைத் தொழில்முனைவு முயற்சியாக மாற்றி, துபாயில் உள்ள தொழில்முனைவோர் அமைப்பின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
டாக்டர் அம்ருதா ஆனந்த் தனது மகள் போதினி ஸ்ரீயை, சித்ரா விஸ்வம் நடத்தும் நடனப் பயிற்சி வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றபோது, இருவருக்கும் குழந்தைகளின் திறன் வளர்ச்சி குறித்த ஒரே சிந்தனை இருப்பது தெரியவந்தது.
“ஒவ்வொரு குழந்தையும் தன்னிடம் உள்ள தனித்திறனை அறிந்து, அதனை வளர்த்து, தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பை ஏன் நாம் ஏற்படுத்தக்கூடாது?”
என்ற அவர்களது சிந்தனையே இன்று அமேசிங் பெர்க் கலை மற்றும் பண்பாட்டு மையமாக உருவெடுத்துள்ளது.
திறமையைக் கண்டறிந்து தனித்துவமான ஆளுமையை உருவாக்குதல்
ஒவ்வொரு குழந்தையும் ஒரே துறையில் சிறந்து விளங்க வேண்டிய அவசியமில்லை. சிலர் இசையில் திறமை பெற்றிருக்கலாம்; சிலர் நடனம், ஓவியம், யோகா, மேடைப் பேச்சு அல்லது படைப்பாற்றல் சார்ந்த துறைகளில் தனித்துவம் கொண்டிருக்கலாம்.
குழந்தைகளின் ஆர்வத்தை அறிந்து, அவர்களுக்கு ஏற்ற பயிற்சிகளையும் வெளிப்பாட்டு வாய்ப்புகளையும் வழங்குவதே அமேசிங் பெர்க் மையத்தின் அடிப்படை அணுகுமுறையாகும்.
இதற்காக நடனம், இசை, நுண்கலைகள், யோகா மற்றும் படைப்பாற்றல் சார்ந்த பயிற்சிகளுடன், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், போட்டிகள் மற்றும் திறமை வெளிப்பாட்டு நிகழ்வுகளையும் நடத்த மையம் திட்டமிட்டுள்ளது.
“சாதனையாளர் என்பவர் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெறுபவர் மட்டுமல்ல; தனது திறமையை உணர்ந்து, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேறுபவரும் சாதனையாளரே” என்ற கருத்தை இம்மையம் முன்னிறுத்துகிறது.
பெண்கள் முன்னேற்றத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் புதிய தளம்
குழந்தைகளின் திறன் வளர்ச்சியுடன் மட்டுமின்றி, பெண்களின் தனித்திறன் மேம்பாடு, உடல் மற்றும் மனநலம், தொழில்முனைவு விழிப்புணர்வு மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றுக்கும் அமேசிங் பெர்க் முக்கியத்துவம் அளிக்கிறது.
இதன் ஒரு பகுதியாக ‘அமேசிங் பெர்க் மகளிர் வட்டம்’ (Amazing Perk Women’s Circle) என்ற முயற்சியின் மூலம் பெண்களுக்கான நலவாழ்வுப் பயிற்சிகள், திறன் கண்டறிதல் நிகழ்வுகள், தொழில்முனைவு வழிகாட்டுதல், தொடர்பு வலையமைப்பு மற்றும் திறமை வெளிப்பாட்டு வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
மேலும், குழந்தைகள், பெற்றோர், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் குடும்பக் கலை விழாக்கள், பண்பாட்டு நிகழ்ச்சிகள், நலவாழ்வு முகாம்கள் மற்றும் சமூகக் கொண்டாட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
துபாய் அல் கைல் கேட் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இம்மையம், எதிர்காலத்தில் துபாயின் பல்வேறு பகுதிகளுக்கும் தனது சமூகநல மற்றும் கலை சார்ந்த முயற்சிகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் செயல்பட உள்ளது.
ஒவ்வொரு குழந்தையும் ஒரு சாதனையாளராக உருவாகட்டும்!
அமேசிங் பெர்க் நிறுவனர்கள் தங்களது நோக்கத்தைப் பகிர்ந்துகொள்கையில்,
“ஒரு குழந்தைக்கு நாம் வழங்கக்கூடிய மிகப்பெரிய பரிசு என்பது ஒரு திறமையையோ, பதக்கத்தையோ, சான்றிதழையோ மட்டும் வழங்குவது அல்ல. அந்தக் குழந்தை தனது உண்மையான ஆற்றலை அறிந்து, தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வளர்வதற்கான வாய்ப்பை வழங்குவதே ஆகும்.”
என்ற கருத்தை வலியுறுத்தினர்.
குழந்தைகளின் திறமைகளை அடையாளம் காணுதல், பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவித்தல் மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களுடன் தொடங்கப்பட்டுள்ள அமேசிங் பெர்க் கலை மற்றும் பண்பாட்டு மையம், துபாயில் கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாட்டை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக உருவெடுத்துள்ளது.
அமேசிங் பெர்க் கலை மற்றும் பண்பாட்டு மையம் – விவரங்கள்
நிறுவனத்தின் பெயர்: Amazing Perk Cultural Centre
நிறுவனர்கள்: டாக்டர் அம்ருதா ஆனந்த் மற்றும் கலாமண்டலம் சித்ரா விஸ்வம்
மையத்தின் தத்துவம்: திறமையைக் கண்டறிவோம்; தனித்துவத்தை வளர்ப்போம்; சாதனையாளர்களாக உயர்வோம்.
முக்கிய நோக்கம்: குழந்தைகள் முன்னேற்றம், பெண்கள் மேம்பாடு மற்றும் சமூக ஒற்றுமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக