ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் Spread Smile's நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்ற பெண் தொழில்முனைவோர் சந்திப்பு நிகழ்ச்சி -2026.
இந்த நிகழ்வில் அமீரகத்தில் வசிக்கும் தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களை தேர்வுசெய்து அவர்களுக்கான அங்கீகாரம் அளித்து மேலும் அனைவருக்கும் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினரராக தமிழக சென்னையில் மிகவும் பிரபலமான சுகன் பல்நோக்கு மருத்துவமனையின் இயக்குனரும், மகப்பேறு சிறப்பு மருத்துவரும், இன்ஸ்டா மற்றும் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான டாக்டர் சுகன்யா சரவணன் மற்றும் அவரது கணவரும் மயக்கமருந்து நிபுணருமான டாக்டர் சரவணன் மற்றும் தமிழகத்தில் தலை சிறந்த ஜோசியர் ரிக்கி ரத்தன் பண்டிட், அவனிர் இன்ஜினியரிங் நிறுவனர் புகழேந்தி, ரிலியஸ் நிறுவனர் டாக்டர் ரூப் சந்தர், நபீஸா டென்டல் நிறுவனர் டாக்டர் சபீர், தமிழக ஆளுங்கட்சியின் மதுரை கிழக்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்டனர் மேலும் சிறப்பு விருந்தினர்களாக துபாய் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், வளைகுடா முதன்மை நெறியாளர் Kamalkvl , அமீரக தமிழ் சங்க தலைவி ஷீலு, அலைன் இந்திய அசோசியன் செயலாளர் முபாரக் முஸ்தபா, தினகுரல் நாளிதழின் வளைகுடா தலைமை நிருபர் நஜீம் மரிக்கா மற்றும் DJ குழுவினர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக Spread Smile's நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக