குடியாத்தம் அருகே வெடி மருந்து குடோன் வெடித்து தரை மட்டம் இரும்பு கதவு தூக்கி வீசப்பட்டதில் கன்று குட்டி பலி போலீசார் விசாரணை !
குடியாத்தம் , அக்டோபர் 29 -
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த அர்ஜுனா புரத்தில். பத்மநாபன் என்பவரு க்கு அர்ஜுனாபுரம் கொல்லைமேடு பகுதி யில் வெடி மருந்து குடோன் உள்ளது.
பத்மநாபன் வீடு அர்ஜுனா புரத்தில் உள் ளது வெடி மருந்து விற்பனை செய்ய லை சென்ஸ் எடுத்து கிணற்றை ஆழப்படுத்த வெடி மருந்து தோட்டா மருந்துகள் விற் பனை செய்து வந்தார்.அதிகமான தோட் டா வெடி மருந்துகள் அந்த குடோனில் ஸ்டாக் வைத்திருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10:30 மணிக்கு குடோனில் இருந்து பயங்கர மான வெடி சத்தம் கேட்டது.
இதனால் சுற்றுப்புற கிராம மக்கள் பத்ம நாபனுக்கு தகவல் தெரிவித்தனர் அங்கு சென்று பார்த்த போது வெடி மருந்து குடோன் தரைமட்டமாக இருந்ததுஅருகில் இருந்த டராக்டர் எரிந்துஉருகுலைந்து கிடந்தது குடோன் வெடி த்து குடோனில் இருந்த. இரும்பு கதவு சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள மாட்டு கொட்டகை மீது விழுந்ததில் கன்று குட்டி இறந்துவிட்டது
இது சம்பந்தமாக கே.வி குப்பம் போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன குடி யாத்தம் டிஎஸ்பி சுரேஷ் கே.வி குப்பம் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் விரைந்து சம்பவ இடத்தை பார்வையிட்ட னர் குடோனில் உள்ள இடத்தில் தூரமாக வீடுகள் இருந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை குடோன் வெடி சத்தத்தில் சுற்றுப்புறம் ஐந்து கிலோமீட்டர் கேட்ட தாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக