ஸ்ரீவைகுண்டம் அக்டோபர் 29 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் 4வது திருப்பதியான (இரட்டை திருப்பதி) தொலைவில்லி மங்கலத்தில் கருடசேவை நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் துவங்கி 11 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஐந்தாம் திருவிழா ஆன நேற்று இரட்டை கருடசேவை நடந்தது.
காலை 6 மணிக்கு விஸ்வரூபம். 7.30 மணிக்கு உள் பிரகாரம் சுற்றி புறப்பாடு நடந்தது. 9.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஆத்தான் வடக்கு திருமாளிகை கண்ணன் ஸ்வாமி. தேவராஜன் ஸ்வாமி. மேலத்திருமாளிகை ராமானுஜம் ஸ்வாமி தெய்வச்சிலை . வரதராஜன் . சீனிவாசன். கண்ணன். ஆகியோர் சேவித்தனர்.
சாத்து முறை கோஷ்டி நடந்தது தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு சாயரட்சை. தொலைவில் லிமங்கலம் உற்சவர் செந்தாமரை கண்ணன் மற்றும் இரட்டை திருப்பதி உற்சவர் தேவர் பிரான் இருவரும் வாகன மண்டபம் எழுந்தருளி கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு இரவு 6 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். உள் பிரகாரம் மட்டும் சுற்றி வந்தார்.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் ரகு. சுந்தர்ராஜன். கண்ணன். கோபால கிருஷ்ணன். ஸ்தலத்தாரகள் ஸ்ரீதரன். சந்தானம். வாசு. நிர்வாக அதிகாரி சதீஷ் ஆய்வாளர் நம்பி அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் உறுப்பினர்கள் ராமலட்சுமி காளிமுத்து. பொன்ராஜ். கன்னி ராஜா. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி. உபயதாரர் திருமலை குடும்பத்தினர் . சீனீவாச அறக்கட்டளை ஆலோசகர் பாபு. பொறியாளர்கள் பிரகாஷ். கார்த்தி களப் பணியாற்றினார் பத்மநாபன். பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக