விவசாயிகள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாமில் ஜே.எஸ்.ஏ கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்ட மாணவிகள் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 அக்டோபர், 2026

விவசாயிகள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாமில் ஜே.எஸ்.ஏ கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்ட மாணவிகள் பங்கேற்பு.


ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில்“Khet Bachao Abhiyan”விவசாயிகள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விவசாயிகளுக்கு அரசு வேளாண் திட்டங்கள், மானிய உதவிகள் மற்றும் வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வுத் தகவல்கள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகள் மற்றும் வேளாண்மை சார்ந்த கருத்துகளைக் கேட்டறிந்தார்.

ஜே.எஸ்.ஏ வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் V. அம்பேத்கர் அவர்கள், துணை முதல்வரும் திட்டப் பொறுப்பாளருமான S. வேல்பிரபாகரன் அவர்கள், திட்டப் பொறுப்பாளர் R. ஜீவநதியால் அவர்கள் மற்றும் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் S. ஆஷா பிரியங்கா அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், கல்லூரியின் நான்காம் ஆண்டு கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்ட மாணவிகளான தேசிகா, ஹரிதா ஆகியோர் இம்முகாமில் பங்கேற்றனர்.

மாணவிகள் விவசாயிகள் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் கலந்துரையாடி, அரசின் வேளாண் திட்டங்கள், மானிய உதவிகள் மற்றும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து நேரடி அனுபவத்தைப் பெற்றனர்.

இப்பயிற்சி முகாம், மாணவிகள் வேளாண்மைத்துறையின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளவும், விவசாயிகளின் தேவைகளை நேரடியாக அறிந்துகொள்ளவும் பயனுள்ளதாக அமைந்தது.

செய்தியாளர் 
ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad