வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 அணி கள் பங்கேற்பு – மாவட்ட கிரிக்கெட் சங் கத் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தகவல்!
வேலூர், நவம்பர் 27 -
வேலூர் மாவட்டம் கிரிக்கெட் சங்கம் சார்பில், வேலூர், நருவீ மருத்துவமனை குழுமம் - ராஜேஸ்வரி நினைவு கோப் பைக்கான டி-20 கிரிக்கெட் போட்டி நாளை (28.11.2026) சனிக்கிழமை தொடங்குகி றது இதுகுறித்து வேலூர் மாவட்ட கிரிக் கெட் சங்கத் தலைவரும், நறுவீ மருத்துவ மனை தலைவருமான முனைவர் ஜி.வி. சம்பத் தெரிவித்ததாவது வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் முதன் முறை யாக ராஜேஸ்வரி நினைவு கோப்பைக் கான டி-20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படு கிறது. வேலூர் டெல் வெடிமருந்து தொழி ற்சாலையின் பின்புறம் அமைந்துள்ள வேலூர் விளையாட்டு அறக்கட்டளை (Vellore Sports Foundation) மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்குகின்றன. தொட ர்ந்து கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும் போட் டிகள் நடைபெறுகின்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீனஸ் கிரிக்கெட் கிளப், வினோத் ஸ்போர்ட்ஸ் அகாடமி, குடியாத்த ம் கிரிக்கெட் அகாடமி, யுனைடெட் ஏ கிரிக்கெட் கிளப், சபா குரூப் கிரிக்கெட் கிளப், எமெர்ஜிங் XI கிரிக்கெட் கிளப், சன் ஷைன் கிரிக்கெட் கிளப், ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் கிளப் என மொத்தம் 8 அணி கள் பங்கேற்கின்றன. அடுத்த மாத இறுதி வரை பல்வேறு நாட்களில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. முதன்முறையாக தொடங்கப்படும் இப்போட்டி, தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்தப்படும். வெள்ளை நிறப் பந்தைக் கொண்டு நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் வெள்ளை நிற கால்சட்டை மற்றும் வண்ண டி-ஷர்ட் அணிந்து விளையாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக