திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சிக்குட்பட்ட சூரியகுளம் கிழக்குத் தெருவில் அமைந்துள்ள ஆரணி கூட்டுறவு பண்டகசாலையில், கூட்டுறவு அங்காடிகள் மூலம் ரூ.200-க்கு சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் அவர்கள் தொடங்கி வைத்தார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு ரூ.200-க்கு சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர். அபிஷேக் மற்றும் கூட்டுறவுத் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக