திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 நவம்பர், 2026

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணக்குருக்கை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ்.வேலு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதி சார்ந்த கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் நேரடியாக எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில், துறை சார்ந்த அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102

வி.ஜெகன் 
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர் 
9894381487

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad