வந்தவாசி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த M. உதயகுமார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 நவம்பர், 2026

வந்தவாசி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த M. உதயகுமார்.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே காஞ்சிபுரத்திலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 35 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, காயம் அடைந்தவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை, திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் M. உதயகுமார் அவர்கள் நேரில் சந்தித்து, அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு உரிய முறையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102

வி.ஜெகன் 
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர் 
9894381487

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad