தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி முதல்அமைச்சர் உத்தரவின்பேரில், அரசு சார்பில் பொதுமக்களுக்கு விலையில்லா தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் முதலமைச்சர் உத்தரவின் பெயரில் புதுச்சேரி அரசு சார்பில் வழங்கப்படும் தீபாவளி சிறப்பு தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கும் பணி தொடங்கியது. முத்தியால்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் பணியை ரேஷன்கடைகளில் தொடங்கி வைத்தார்.
சோலை நகர் சிங்காரவேலர் சமுதாய நலக்கூடம், பாரதிதாசன் வீதி பழைய மேரி கட்டிடம், அங்காளம்மன் நகர் கோவில் எதிரில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த பரிசுப்பொருட்கள் வழங்கும் பணியை மண்ணின் மைந்தன், முத்தியால்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
இதன்மூலம் முத்தியால்பேட்டை தொகுதியில் சுமார் 10 ஆயிரம் ரேஷன்கார்டுதாரர்கள் பயனடைகின்றனர். இந்த பணியின்போது புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி என்ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக