வேலூர் , நவம்பர் 7 -
வேலூர் மாவட்டம், வேலூர் வாசகர் வட்டம் சார்பில் சிலைக் கவியரங்கம், கோவில் கவியரங்கம் ஆகியவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, ஹோட்டல் கவி யரங்கம் வேலூரில் உள்ள ஹோட்டல் துர்கா பவனில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஹோட்டல் உரிமையாளர் கே.எஸ். உதயசங்கர் தலைமைதாங்கி கவியரங்கத்தைத் தொடங்கி வைத் தார். 'தீபாவளி வாழ்த்து' என்ற தலைப் பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு கவிஞர் ச. லக்குமிபதி தலைமை தாங்கிப் பேசினார். வாசகர் வட்டத் தலைவர் ஜெ. ரவி முன்னிலை வகித் துப் பேசினார்.
இதில் கவிஞர் எஸ்.கே.எம். மோகன் தனது தீபாவளி வாழ்த்துக் கவிதை யை வாசித்தார். அவரது கவிதையில்,
தீபங்களின் ஒளி தீபாவளி! நரகாசுர னை வதம் செய்த நன்னாள் தீபாவளி! தீமைகள் அகன்று நன்மை கிடைக் கும் நல் தீபாவளி!புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடி த்து மகிழும் மனம் நிறைந்த தீபாவளி!
தீப ஒளி பேரொளியாகி அனைவர் மீதும் ஒளி வீசட்டும்! துன்பங்களும் கஷ்டங்களும் விலகி நலம் தரும் தீபாவளியாக அமையட்டும்! இயலாத வருக்கு இயன்றதை வழங்கி மகிழும் இன்பத் தீபாவளி! வறுமையை ஒழி த்து வளமையை வழங்கி, வாழ்க்கை யில் வர்ணஜாலம் புரியும் மத்தாப்புத் தீபாவளி! குடும்பத்தினருடன் குதூ கலமாக, மனதில் மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடும் இதயத் தீபாவளி!என்று கவிதை வாசித்து தீபாவளி வாழ்த்து களைத் தெரிவித்தார்.அதைத் தொ டர்ந்து கவிஞர்கள் குமரன் சீனிவா சன், பொன். செல்வக்குமார், ஜோசப் அன்னையா, பொன். ராஜன்பாபு, ரோட்டரி முன்னாள் தலைவர் மணி வண்ணன், ஆசிரியர் சத்யநாதன், கல்லூரி மாணவி ஆர்த்தி ஆகியோர் தீபாவளி வாழ்த்துக் கவிதைகளை வாசித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக