நீர்வளத் துறை உதவி செயற் பொறியா ளர்கள் சுரேஷ், தீபா வாணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 நவம்பர், 2026

நீர்வளத் துறை உதவி செயற் பொறியா ளர்கள் சுரேஷ், தீபா வாணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

காட்பாடியில் நீர்வளத் துறை உதவி செயற் பொறியாளர்கள் சுரேஷ், தீபா வாணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
மணல் குவாரி முறைகேடு புகார் – நீர் வளத்துறையில் மாபெரும் ஊழல் குறித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை!

காட்பாடி , நவம்பர் 7 -

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காந்திநகர் பகுதியில் வசிக்கும் நீர் வளத் துறையைச் சேர்ந்த இரண்டு உதவி செயற் பொறியாளர்களின் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 06. 11.2026, வெள்ளிக்கிழமை காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகி ன்றனர்.

காட்பாடி காந்திநகர் மேற்கு குறுக்குச் சாலையில் உள்ள உதவி செயற்பொறி யாளர் சுரேஷ் என்பவரது வீடு மற்றும் காந்திநகர் கிழக்குப் பகுதியில் உள்ள மற்றொரு உதவி செயற்பொறியாளர் தீபாவாணி என்பவரது வீடு ஆகிய இரு இடங்களிலும் திருவண்ணாமலை, காஞ் சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதி காரிகள் தனித்தனிக் குழுக்களாகப் பிரி ந்து ஒரே நேரத்தில் சோதனையில் ஈடு பட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியது மற்றும் அவற்றின் செயல்பாடுகளில் நடை பெற்றதாகக் கூறப்படும் முறை கேடுகள் தொடர்பான புகார்களின் அடிப் படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரி விக்கின்றன. இதில், அதிகாரிகளின் வீடு களில் உள்ள முக்கிய ஆவணங்கள், சொ த்து விவரங்கள் மற்றும் பணப் பரிவர்த் தனைகள் தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவி ரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

நீர்வளத்துறையில் மணல் குவாரி அனு மதி மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக எழுந்துள்ள முறைகேடு புகார்களின் பின்னணியில், இரண்டு உதவி செயற் பொறியாளர்களின் வீடுகளில் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் இந்தத் திடீர் சோதனை காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad