ரோட்டரி சங்கம், அரசு தலைமை மருத்து வமனை மற்றும் ராஜகோபால் பாலி டெக்னிக் கல்லூரி இணைந்து இரத்த தான முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 நவம்பர், 2026

ரோட்டரி சங்கம், அரசு தலைமை மருத்து வமனை மற்றும் ராஜகோபால் பாலி டெக்னிக் கல்லூரி இணைந்து இரத்த தான முகாம் !

ரோட்டரி சங்கம், அரசு தலைமை மருத்து வமனை மற்றும் ராஜகோபால் பாலி டெக்னிக் கல்லூரி இணைந்து இரத்த தான முகாம் !
குடியாத்தம். நவம்பர் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம். இன்று
வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் முற்பகல் ஒரு மணி வரை ராஜ கோபால் பாலிடெக்னிக் கல்லூரி வளாக த்தில் சிறப்பாக நடைபெற்றது சங்கத் தலைவர் டி. எஸ். ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். என்.எஸ். எஸ் திட்ட அலுவலர் ஜே. யோகராஜ் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.ராஜாராம் சிறப்புரையாற்றினார். மருத்துவ அலுவ லர் எஸ். மஞ்சுநாதன், கல்லூரி டீன் ஆர். அமுதா, ECE துறைத்தலைவர் எஸ். சரவ ணசெந்தில், முன்னாள் தலைவர்கள் என் சத்தியமூர்த்தி, மேகராஜ், கே சந்திரன், வருங்கால தலைவர் என். ஜெயச்சந்தி ரன்  கே. எம். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை. வகித்தனர் இரத்த தான பிரிவு அலுவலர் டாக்டர் ஆக்னஸ் பியூலா இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார். இம்முகாமில் 27 யூனிட் ரத்தம் மாணவர்களிடமிருந்து தானமாக பெறப்பட்டது. இம்முகாமில் ரத்த தானம் அளித்த மாணவர்களுக்கு ஆம்பூர் HDFC வங்கி கிளை மேலாளர் சரவணன் நினைவு பரிசு வழங்கினார். மேலும் இம் முகா மில் செயலாளர் ஜெ. தமிழ்ச்செல்வன், ரத்த தான பிரிவு தலை வர் பிரேம்குமார், இளைஞர் பணி இயக்கு னர் எம்.டி. பிரவீன் பாபு, எம். ஆர். மணி, எஸ். பரசுராமன்,பி. ஜெயக்குமார், மருத்து வமனை இரத்த தான குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டணர் இறுதியில் என். எஸ். திட்ட அலுவலர் ஜி. உமா நன்றி யுரை ஆற்றினார்.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad