கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு கட்டுரை கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது இந்த போட்டியில் வெற்றி பெற்ற 120 மாணவ மாணவிகளுக்கு உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கத்தின் புரவலர் இரா.குமரகுரு அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ் பரிசு பொருட்களை வழங்கி கௌரவித்தனர்.
தொடர்ந்து தஞ்சாவூர் திருநங்கை முனைவர் ராணி அம்மாள் குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பள்ளியந்தாங்கல் முருகன் அவர்களின் மாணவ மாணவிகள் சிலம்பாட்டத்தை நிகழ்த்திக்காட்டினர் நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள் தமிழ் மொழியின் பெருமையை குறித்தும் தமிழ் மண்ணைப் பற்றியும் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினர் நிகழ்ச்சியில் தமிழ் சங்கத்தின் பொருளாளர் மணிபாலன் துணை தலைவர் காசி, செலவராசு, முனைவர் சி.சங்கர், ஆசிரியர்கள் ராஜவேல், கோபால், சந்திரசேகர், கந்தசாமி, சின்னசேலம் தமிழ் சங்கத்தில் தலைவர் கவிதை தம்பி ஜவஹர்லால் நேரு மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் கௌரி, பாக்கியலட்சுமி, சரிதா, உறுப்பினர் எம்.எஸ்.முருகன் உள்ளிட்ட தமிழ்ச்சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியாக உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் முத்துக்குமரன் நன்றி உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக