பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே.மணி MLA 2023 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 டிசம்பர், 2022

பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே.மணி MLA 2023 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தி.


பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே.மணி MLA 2023 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார் அதில், உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2023  இந்த ஆணடு நல்ல ஆண்டாக அமைய வேண்டும். மக்கள் மத்தியில் அன்பும், சகோதர நல்லிணக்கமும், மனித நேயமும் சேவை மனப்பான்மையும் அறநெறியும் ஓங்கி வளர்ந்து வன்முறை,  தீவரவாதம், பகை, அகல வேண்டும். தொழில் வளர்ந்து, உற்பத்தி பெருகி, வாங்கும் சக்தி அதிகரித்து, வேலையில்லாத் திண்டாட்டம் போக்கி, வறுமையில்லாத, தன்னிறைவு நிலை உருவாக வேண்டும். விவசாய உற்பத்தி பெருகி வளம் ஒங்க வேண்டும். 

அனைவர் வாழ்விலும் மாற்றம் ஏற்பட வேண்டும். அதனால் முன்னேற்றம் அமையும். ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியும் ஒவ்வொரு குடும்பத்தின் மேம்பாடும் தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சியும், நாட்டின் உயர்வுமாகும். இந்நிலை உருவாக வேண்டும், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவ மாணவிகள், தொழில்முனைவோர், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர் என அனைவரும் மேம்படவேண்டும். 


உங்களுக்கு கடந்த ஆணடு வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு செயல்பட்டால் மாற்றமும் உயர்வும் நிச்சயம் கிட்டும். நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் மன நிறைவுடன் எல்லா வளமும் பெற்று குடும்ப நலமுடன் நீடுழி வாழ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad