முதல்வருக்கு கோரிக்கை வைத்த உப்பளம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அணிபால். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 ஜூலை, 2023

முதல்வருக்கு கோரிக்கை வைத்த உப்பளம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அணிபால்.

புதுச்சேரி மாநில திமுக துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அரசின் சீர் திருத்த துறையின் நிர்வாகத்திறமை இன்மையால்  வீதிக்கு வந்து போராடும் அரசு ஊழியர்களின் பரிதாபநிலைமையினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தீர்த்து வைக்க வேண்டும், அமைச்சக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் சில தலைமைச் செயலக அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் இன்று புதுச்சேரி மாநில தலைமைச் செயலகம் போர்க்களமாக மாறி இருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து - குறைந்த அளவே எண்ணிக்கையிலானமுதுநிலை எழுத்தர்கள் தேர்வு செய்தது நியாயம் இல்லை. உதவியாளர் பதவி உயர்வு கோரிக்கையில்  முதல்வர் அரசு ஊழியர்கள் பக்கம் நின்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசினை லவலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கேட்டு கொண்டது என்னவென்றால் மேல்நிலை எழுத்தர்கள் (UDC) தங்கள் துறை சார்ந்த போட்டி தேர்வு ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தியதோடு -32 ஆண்டு கால பழைய பாடத்திட்ட நகலை கிழித்து எரிந்து தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். மேலும் நிர்வாகம் சிறப்பாக நடைபெற அந்த பழைய பாடத்திட்டத்தை மாற்றிட புதிய விதிகளின்படி திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


மேலும் புதுவை நிர்வாக சீர்திருத்த துறை தற்போது நடந்த மேல்நிலை எழுத்தர் தேர்வில்(UDC DIRECT RECRUITMENT) 116 பணியிடங்கள் மட்டுமின்றி கூடுதலாக 146 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிப்பாணை வெளியிட்டனர். ஆனால் 116 மேல்நிலை எழுத்தர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளனர். இதனால் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சல் மற்றும் ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது.


நான் அரசிடம் ஏற்கனவே உதவியாளர் பணியை தற்போது உள்ள மேல்நிலை எழுத்தர்களை கொண்டு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர் மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று கோரிக்கையினை தொடர்ந்து வைத்துவந்துள்ளேன், அதுமட்டுமின்றி புதுவை அமைச்சக ஊழியர்கள் கடந்த ஓராண்டாக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களையும் நடத்தி உள்ளனர்.


அவ்வாறு பதவி உயர்வு கொடுத்திருந்தால்  தற்போது நடைபெற்ற மேல்நிலை எழுத்தர் தேர்வில் 400 முதல் 500 பணியிடங்களை நிரப்பி இருக்கலாம், புதுவை நிர்வாக சீர்திருத்தத்துறை அவ்வாறு செய்யாமல் வெறும் 116 மேல்நிலை எழுத்தர்களை தேர்வு செய்ததன் மூலம் புதுச்சேரி வாழ் இளைஞர்களை ஏமாற்றியுள்ளது. அது மட்டும் இன்றி பணியில்உள்ள மேல்நிலை எழுத்தர்களையும் பதவி உயர்வு அளிக்காமல் ஏமாற்றி உள்ளது கண்டனத்துக்குரியது.


தற்போது அமைச்சக ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் போராடியும் வருவதால் புதுச்சேரி நிர்வாக துறை அவர்களின் கோரிக்கையை ஏற்று உதவியாளர் பதவியை தற்போதுள்ள மேல்நிலை எழுத்தர்களை கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைக்கிறேன். மேலும் முதல்வரும் இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி இக்கோரிக்கையை நிறைவேற்றுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், அதுமட்டுமல்லாமல் தற்போது துறை ரீதியான தேர்வு எனப்படும்  ldce தேர்வினை நடத்தினால் அது  உதவியாளர் பணிக்கு நேரடி போட்டித்தேர்வுக்கு  வழிவகுக்கும். ஏற்கனவே  udc போட்டித்தேர்விற்கு கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்து வெறும் 116  இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 


மேலும்அசிஸ்டன்ட் தேர்வு நடத்தினால் அதில்  வெளிமாநிலத்தவரும் பங்குபெறும் நிலைமை உருவாகும். இது புதுச்சேரி மாநிலத்தில் ஓர் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி விடும். அரசு ஊழியர்களின் போராட்டங்களை நசுக்கிய வரலாறு என்றைக்கும் வெற்றி அடைந்தது இல்லை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த காலங்களில் உள்ள நடைமுறையை பின்பற்றி அரசு ஊழியர்களின் கோரிக்கையை தீர்த்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.


உதவியாளர் பதவி உயர்வு நியமன விதிகள் குறித்து சட்டப்பேரவைத்தலைவர் அவர்களிடம் புகார்கள் வந்துள்ளதாக தெரிகிறது. அதனுடைய உண்மைத்தன்மை அறியும்வரை எந்த விதமான போட்டித் தேர்வையும் நடத்தக் கூடாது என அரசுக்கு வேண்டுகோள் வைக்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/