தூத்துக்குடி - அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வரும் 15.08.2023 கிராம சபைக் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற மாவட்ட ஆட்சியருக்கு எம்பவர் இந்தியா கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி - அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வரும் 15.08.2023 கிராம சபைக் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற மாவட்ட ஆட்சியருக்கு எம்பவர் இந்தியா கோரிக்கை.


தூத்துக்குடி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் இயக்குனர் அவர்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் இயக்குனர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டில் வருகின்ற ஆகஸ்ட் 15-ம் நாள் நடைபெற உள்ள சிறப்பு கிராம சபை கூட்டங்களில் அயோடின் உப்பு உணவுக்கு பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த (அஜென்டா எண் 5) உரிய அறிவிப்பு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்கள்.


இதில் தோல், ஐஸ் மற்றும் இதர பொருட்களை பதப்படுத்துவதற்கான உப்பை, இது பதப்படுத்துவதற்கான உப்பு (PRESERVATIVE PURPOSES ONLY) என்பதையும் இதனை உணவுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதனையும் ஆங்கிலத்தில் பொட்டலத்தின் மீது அச்சடித்து கிராமப்புறங்களில் உணவு தயாரிப்பிற்காக விற்பனையில் உள்ளது. இது குறித்து கூட்டத்தில் கலந்து கொள்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அயோடின் கலந்த உப்பு மட்டுமே கவனமாக வாங்கி பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட கடைகளில் அயோடின் இல்லாத உப்பை கடைக்காரர்கள் விற்பனை செய்யக்கூடாது என தீர்மானம் இயற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.


அயோடின் உப்பை உணவுக்கு பயன்படுத்துவதன் அவசியம் குறித்து சுகாதார ஆய்வாளர்கள், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மருத்துவ அலுவலர் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு உள்ள (PRESERVATIVE PURPOSE ONLY) உப்பு சபை உறுப்பினர்களையும் அவர் தம் குடும்பத்தினரையும் அயோடின் சத்து இல்லாவிட்டால் வரக்கூடிய 50-க்கும் மேற்பட்ட உடல் மற்றும் மன நல கொள்கின்றோம். இவர்களில் எவர் ஒருவரையாவது அழைத்து, பதப்படுத்தும் உப்பு என பாக்கெட்டுகளை உணவு தயாரிக்க பயன்படுத்த கூடாது. 


இதில் அயோடின் சத்து நாம் உண்ணும் உணவில் போதுமானதாக இல்லை. இதனால் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி கிராம சபை உறுப்பினர்களையும் அவர் தம் குடும்பத்தினரையும் அயோடின் சத்து இல்லாவிட்டால் வரக்கூடிய 50-க்கும் மேற்பட்ட உடல் மற்றும் மன நல குறைபாடுகளில் இருந்து பாதுகாக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.." இவ்வாறு ஆ. சங்கர் உறுப்பினர்- தூத்துக்குடி மாவட்ட அயோடின் குறைபாடுகள் தடுப்பு கமிட்டி & கௌரவ செயலாளர், எம்பவர் இந்தியா, நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம், தூத்துக்குடி மாவட்டம். அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி இருக்கும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/