கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி அருகே மழைநீர் வடிகால் கால்வாய் கட்டும் பணி நடுவே ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள் பொதுமக்கள் அச்சம் கண்டுகொள்ளமா ? மின்வாரியத்துறை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி அருகே மழைநீர் வடிகால் கால்வாய் கட்டும் பணி நடுவே ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள் பொதுமக்கள் அச்சம் கண்டுகொள்ளமா ? மின்வாரியத்துறை


கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதூர் கிராமத்தில் சுமார் 152 மீட்டர் அளவில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கால்வாயின் நடுவிலே மின் கம்பங்கள் அகற்றும் செய்யாமலே ஆபத்தான நிலையில் உள்ளது, இந்நிலையில் நேற்று இரவு வெளுத்து வாங்கிய மழையால் மழைநீர் அதிக அளவில் வடிகால் வாய்க்காலில் சூழ்ந்துள்ளதால் மின் கம்பங்கள்  சாயும் நிலையில் உள்ளது மேலும் ஒரு சில மின்கம்பங்களில் சிமெண்ட் கான்கிரீட் டில்  விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் திடீரென கீழே சாயும் நிலையில் உள்ளது.


இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர், பலமுறை ஒப்பந்ததாரர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் மின் துறைக்கு தகவல் தெரிவித்தும்  இதனால் வரை கண்டு கொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது, கடலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வரும் சூழலில் உயிர் சேதம் ஏற்படும் முன் சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன்  தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad