நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர்


நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர், இன்று 18.08.2023-ந் தேதி காலை 11.00 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால் அவர்கள் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. 


உறுதிமொதி – நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.


மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் தனிப்பிரிவு காவல் ஆய்வளர் சண்முகம், உதவி ஆய்வாளர்கள், மாவட்ட காவல் அலுவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் கலந்துகொண்டு நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


- கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் க.சமியுல்லா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad