வேலூர் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன் வழக்கறிஞர்கள் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் .
வேலூர் மாவட்டம் நீதிமன்ற வளாகம் முன் வழக்கறிஞர்கள் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு கொண்டுவந்துள்ள, இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களின் ஆங்கில பெயர்களை முறையே, பாரதிய நியாய ஷன்ஹிதா, பாரதிய நஹ்ரிக் சுரக்சா, பாரதிய சாக்சிய அதிநயம் என்ற ஹிந்தி பெயருடன் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள சீர்த்திருத்தங்களை திரும்ப பெறக்கோரி, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலூர் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் DM கதிர் ஆனந்த் கலந்துக் கொண்டு உரையாற்றினார் உடன் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.
வேலூர் மாவட்ட தாலுகா செய்தியாளர் மு .இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக