கொடைக்கானல் எரிச்சலையில் போக்குவரத்து நெரிசலில் அரை மணி நேரம் சிக்கித் தவித்த 2 ஆம்புலன்ஸ்கள். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா தளமான லேக் ஏரி மிகவும் சுற்றுலா பயணிகளின் போக்குவரத்து மிகுந்த பகுதியாக உள்ளது மேலும் இன்று லேக்ஏரிச் சாலை பகுதியில் அரசு மருத்துவமனையில் இருந்து மேல்மலை கிராமங்களுக்கு செல்லக்கூடிய இரண்டு ஆம்புலன்ஸ்களில் பிரசவத்திற்காக சென்ற போது லேக் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுமார் அரை மணி நேரம் ஆம்புலன்ஸ் மாட்டிக்கொண்டது இதனால் அப்பகுதி தன்னார்வலர்களின் உதவியுடன் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு மெல்ல மெல்ல ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டு ஆம்புலன்ஸ் செல்ல உதவி செய்தனர் மேலும் அப்பகுதியில் கூடுதலாக போக்குவரத்து காவலர் நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன். மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக