தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவர் சன்னதி மற்றும் ஷண்முகர் சன்னிதியில் திருமணம் செய்ய கூடாது என திருக்கோயில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உலக புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். காலங்காலமாக முகூர்த்த நாட்களில் மூலவர் சன்னதியின் முன்பும் ஷண்முகர் சன்னிதியின் முன்பும் திருமணம் செய்தால் அந்த முருகனே குழந்தையாக பிறப்பார் என்றும் மாங்கல்யம் நீண்ட நாட்கள் நிலைக்கும் என்று மக்கள் நம்பிவருகின்றனர்.
ஆனால் தற்போது சன்னதியில் வைத்து திருமணம் செய்ய அனுமதி இல்லை என்பதால் மக்கள் மிகுந்த வருத்தமைடைகின்றனர். நேற்று முன்தினமும் நேற்று பக்தர்களுக்கு கோவிலில் முருகன் சன்னதியின் முன்பு திருமணத்திற்கு அனுமதி மறுத்ததால் பக்தர்கள் கோவிலில் கடற்கரை பக்கத்தில் உள்ள பிரகாரத்தில் திருமணம் செய்தனர். இதனால் பக்தர்கள் மிகுந்த வருத்தத்துடன் சென்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கூறி வருகின்றனர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக