சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் சிலை அருகில் மோட்டார் பைக் விபத்து சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் சிலை அருகில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற 28 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணை தனியார் நிறுவனத்தில் விற்பனை ஊழியராக பணி செய்யும் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் சுந்தர் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் பெரியார் சிலை நோக்கி வந்த பொழுது இளம் பெண் மீது மோதியதில் இருவரும் நிலை தடுமாடிய நிலையில் அருகில் இருந்த பிரபல ஜவுளிக்கடை கண்ணாடியை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளானது இதில் ஜவுளிக்கடை ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஜவுளிக்கடை கண்ணாடியும் பலத்த சேதம் அடைந்தன. இந்த விபத்தில் காயமுற்ற இளம் பெண் மற்றும் வாலிபரையும் 108 ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காரைக்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக