தமிழககுரல் செய்தி எதிரொலி; கால்வாயின் நடுவிலிருந்த மின் கம்பம் அகற்றம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

தமிழககுரல் செய்தி எதிரொலி; கால்வாயின் நடுவிலிருந்த மின் கம்பம் அகற்றம்.

தமிழக குரல் செய்தி எதிரொலியாக மழை நீர் வடிகால் கால்வாய் கட்டும் பணியின் நடுவே இருந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்களை மின்சாரத்துறை அதிகாரிகள் பணியை முழுமையாக  சரி செய்தனர் கிராம குடியிருப்பு வாசிகள் தமிழக குரல் செய்தி நிறுவனத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தனர்



கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் 152 மீட்டர் அளவில்  மழைநீர் வடிகால் கால்வாய் கட்டும் பணி நடுவே ஆபத்தான நிலையில் பழுதான நிலையில் மின் கம்பங்கள் அகற்றம் செய்யாமலே பணி நடைபெற்று வந்த நிலையில் கிராம  பொதுமக்கள்  தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து  அதிர்ச்சி அடைந்தனர்.


இதனை அறிந்த தமிழக குரல் செய்தி நிறுவனத்தின் மூலமாக கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி செய்தியை வெளியிட்டு பொதுமக்களின் கோரிக்கையை  கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் த. அருண் தம்புராஜ் அவர்களின் நேரடி கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது, மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கு இணங்க தமிழ்நாடு மின்சார வாரியம் புவனகிரி இளமின் பொறியாளர், மருதூர்  ஊராட்சி  நிர்வாகமும் இணைந்து ஆபத்தான நிலையில் இருந்த மின் கம்பங்களை உடனடியாக அகற்றம் செய்து புதிய மின் கம்பங்களை  அமைத்து கொடுத்தனர்.


இதனை அறிந்த  அப்பகுதி பொதுமக்கள் தமிழக குரல் செய்தி நிறுவனத்திற்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad