கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் கிராமத்தில் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற கோரிக்கை... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் கிராமத்தில் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற கோரிக்கை...

சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் கிராமத்தில் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற கோரிக்கை.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி அமர்ந்துள்ளது. இப்பள்ளி வளாகம் தாழ்வாக இருப்பதால் தொடர்ந்து பெய்து வரும் மழையால், தண்ணீர் வெளியேற வழி இல்லாததால் பள்ளியில் மழைத் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் பள்ளி தாழ்வான பகுதியாக இருப்பதால் சுற்றுப்புற பகுதிகளிலிருந்தும் மழை தண்ணீர் பள்ளி வளாகத்தில்  நுழைகிறது. ஏற்கனவே வடிகால் இருந்தது அடைக்கப்பட்டு விட்டதால் தற்போது தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் கடந்த ஒருவாரத்திற்க்கும் மேலாக தொடர் மழையின் காரணமாக தண்ணீர் அதிகம் தேங்கியுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு அசௌகரியமான நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பள்ளியின் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக வடிய வைத்து பள்ளி வளாகத்தை சமப்படுத்த வேண்டும், பள்ளியில் தேங்கும் தண்ணீர் வடிவதற்கு வடிகால் அமைத்துத் தர வேண்டும் என பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும், கிராமத்தினரும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad