கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் செயல்பட்டு வரும் விநாயகர் பேரரசர் அறக்கட்டளை சார்பாக காட்டுமன்னார் கோவில் அடுத்த பழஞ்சநல்லூர் ஊராட்சி பட்டிக்கொல்லை பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் சர்வதேச பழங்குடியினர் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத்தலைவர் இளையபெருமாள் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உமா சங்கரி,. உதவிஆசிரியர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கிராம நிர்வாக அலுவலர் செங்குட்டுவன் கலந்து கொண்டார். பள்ளி மாணவ மாணவிகளுக்கான நோட்டு பேனா பென்சில் போன்ற கல்வி உபகரணங்களை வழங்கினார். கிராம நிர்வாக அலுவலர் பேசுகின்ற போது இங்கு வசிக்கின்ற பழங்குடி மக்களுக்கு தடையின்றி சாதி சான்றிதழ் வீட்டுமனைப் பட்டா போன்ற அனைத்து உதவிகளும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்து வருகின்றேன். இனி வருங்காலங்களில் எந்த உதவி வேண்டுமானாலும் நீங்கள் என்னை அணுகலாம் என்று என்று கூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அறக்கட்டளை இயக்குனர் கனகராஜ் பழங்குடி மக்களுக்கு மத்திய அரசு மாநில அரசு வழங்கும் திட்டங்களைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் குழந்தைகளுக்கான கல்வி பயில்வதற்கும் போதிய உதவிகள் செய்து தர உறுதுணையாக இருப்பேன் என்றும் கூறினார் நிகழ்ச்சியில் தன்னார்வலர் காளிதாஸ், நித்தியா, காமாட்சி சந்தோஷ் பழனியம்மாள் உள்ளிட்ட 75 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக