மாநில அளவிலான அமைச்சூர் மல்லர் கம்பம் போட்டியில் பரிசுகளை வாரிக்குவித்த சிவகங்கை மாவட்ட மாணவர்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

மாநில அளவிலான அமைச்சூர் மல்லர் கம்பம் போட்டியில் பரிசுகளை வாரிக்குவித்த சிவகங்கை மாவட்ட மாணவர்கள்.

தமிழ்நாடு அமைச்சூர் மல்லர் கம்பம் கழகம் சார்பில் கடந்த 5 மற்றும் 6 ஆம் தேதியில் சென்னை அயனாவரம் அருகில் உள்ள ஆர்.பி.எப் அணிவகுப்பு மைதானத்தில் மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டி நடைபெற்று நிறைவடைந்தது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். 


இதில் ராகுல் கணேஷ், சிவனேசன், விஷ்னு, சித்திக்பாண்டியன் மற்றும் விஷ்வா ஆகிய மாணவர்கள் மல்லர் கம்பம் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலிருந்து பரிசுகளை குவித்தது இதுவே முதல் முறை என்பதால் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் அவர்கள் அம்மாணவர்களை சந்தித்து தன் சார்பாகவும் சிவகங்கை மாவட்ட மக்களின் சார்பாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். 


இந்நிகழ்வில் தமிழ்நாடு அமெச்சூர் மல்லர் கம்பம் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் திரு ஏகலைவன் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் திரு பயாஸ் அகமது உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad