பாவபட்ட மக்கள் பயமுறுத்தும் முட்புதர்கள் மிஷனரி ஹில்பொது மக்கள் பெரும் அவதி
ஊட்டி நகராட்சி பழைய 8வது வார்டு புதிய 16 வார்டிற்குட்பட்ட மிஷனரி ஹில் செல்லும் சாலையோரங்களில் வளர்ந்து பயமுறுத்தும் முட்புதர்கள் பொது மக்கள் பெரும் அவதி
ஊட்டி நகராட்சி பழைய 8வது வார்டு புதிய 16 வார்டிற்குட்பட்ட மிஷனரி ஹில் செல்லும் சாலையோரங்களில் வளர்ந்து பயமுறுத்தி முட்புதர்களால் பொது மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்
ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதேபோல், பெரும்பாலான சாலைகளில் முட்புதர்கள் வளர்ந்துள்ளது.
மேலும் சாலையோரங்களில் மழை நீர் வடிகால்கள் சீரமைக்கப்படாமல் உள்ளதால், சாலையோரங்களில் சேறும் சகதியும் நிறைந்து மழைக்காலங்களில் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பழைய8வது வார்டு புதிய 16வது வார்டு பகுதியில் உள்ள மிஷனரிஹில் பகுதிக்கு செல்லும் சாலையில், சாலையோரங்களில் நடக்கவே முடியாத அளவிற்கு வளர்ந்து நறைந்துள்ள முட்புதர்கள் அந்த பகுதியில் நடந்து வரும் பொதுமக்களுககு பெரும் இன்னலை தந்து வருகிறது
இது குறிந்த இந்த பகுதி நகர மன்ற உறுப்பினருக்கும் நகராட்சி ஆணையாளருக்கும் பலமுறை இது குறித்து புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் விரக்தி தெரிவிக்கின்றனர்
உதகை நகராட்சிக்குள் இப்படி அடிப்படை தேவைகள் இல்லா பகுதியும் உள்ளதா என்ற அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த பகுதி உள்ளது
வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு இந்த சாலையில் செல்லூம் போதுதான் அந்த வலி புரியும்
நகர மன்ற உறுப்பினர்.கருத்து
இது குறித்து நகர மன்ற உறுப்பினர் கூறும் போது சிறப்பான பணிகளை செய்து வருவதால்தான் சுயேட்சையாக வெற்றி பெற்றுவருகிறோம் நகராட்சியில் ஆட்கள் பற்றாகுறை உள்ளது வரும் புதன் கிழமை இந்த பகுதி சீர்செய்யபடும் என்றார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக