கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழைகிராமத்தில் என்எல்சி நிர்வாகம் சார்பில் கட்டப்படும் பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழைகிராமத்தில் என்எல்சி நிர்வாகம் சார்பில் கட்டப்படும் பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்


சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழைகிராமத்தில் என்எல்சி நிர்வாகம் சார்பில் கட்டப்படும் பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழை  கிராம முகப்பில் பரவனாற்றில் புதிய பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது.  பாலத்தின் கட்டுமானப் பணி முடியும் தருவாயில் உள்ள நிலையில் அதற்கு இணைப்பு சாஹலை அமைக்கும் பணி என்எல்சி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்பணியை செய்தவர்களை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்திய  கத்தாழை, மும்முடிசோழகன், கரைமேடு, ஊ.ஆதனூர் உள்ளிட்ட கிராம மக்கள் பாலத்தினை சரியாக அமைக்கவில்லை அரைகுறையாக பணிகளை செய்துள்ளீர்கள். பாலத்தில் உள்ள பக்கவாட்டு சுவர் ஹாலோ பிளாக் கல்லை வைத்து கட்டி உள்ளீர்கள் என்று குற்றம் சாட்டி, கான்கிரீட் வைத்து பக்கவாட்டு சுவரைக் கட்டச் சொல்லி என்எல்சி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இந்த பக்கவாட்டு சுவற்றுப் பணியை தரமாக முடித்துவிட்டு அதன் பிறகு இணைப்புச் சாலை வேலையை தொடங்குங்கள் என்று  தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கத்தாழை கிராம முகப்பில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் மிக நீண்ட விவாதத்திற்கு பிறகு ஹாலோ பிளாக் வைத்து கட்டப்பட்ட பக்கவாட்டுசுவற்றை அதிகாரிகள் முன்னிலையில் அப்புறப்படுத்த் தொடங்கினர். இந்நிலையில் இங்கு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad