தஞ்சாவூரில் கே.வல்லுண்டான்ப்பட்டு கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த நிகழ்ச்சி பிஷப்ஹீபர் கல்லூரியின் சமூக பணித்துறை மாணவன் மற்றும் செட் இன்டியா சமூக சேவை நிறுவனம் இணைந்து நடத்தும் தஞ்சாவூர் மாவட்டம், கே.வல்லுண்டான்பட்டு கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த நிகழ்ச்சி என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ர.மங்கையர்கரசி வரவேற்று பேசினார். அடுத்தப்படியாக பேபிராகினி இல்லம் தேடி கல்வி தொண்டர் அறிமுகயுரை தெரிவித்தார், தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கருத்துரை வழங்கிய .கே.பரிமளா காந்தி சமூகப்பணியாளர் தஞ்சை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தலைமையுரை .பி. ஜெய் எடில்பர்ட் திட்ட இயக்குனர் செட் இன்டியா சமூக சேவை நிறுவனம் வழங்கினார்.
களப்பணி ஆலோசகர் முனைவர் பா.அருண்குமார். திருச்சிராப்பள்ளி, கல்லூரி உதவிப் பேராசிரியர் சமூகப்பணித்துறை பிஷப் ஷீபர் அவர்களின் வழிகாட்டுதல்படி சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட கே.வல்லுண்டான்ப்பட்டு பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அனைத்து ஏற்பாடுகளையும் திருச்சி பிஷப் ஹீபர் . சமூகப் பணித்துறை சார்பாக செல்லவன் ம.தினேஷ்குமார் ஒருங்கிணைத்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக