இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு கலைக்கல்லூரியில் BA English படிக்கும் பட்டியலின மாணவன் ஒருவன் அம்பேத்கர் படத்தை தனது செல்போன் முகப்பு படமாக வைத்துள்ளான் என்பதற்காக இதனை பொறுத்துக் கொள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அந்தப் படத்தை உடனே மாற்ற கோரி வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெளியாட்களை கொண்டு வந்து பட்டியலன மாணவனை கும்பலாக தாக்கியுள்ளனர் இத்தகைய செயல்களில் ஈடுபட்ட மாணவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இராணிப்பேட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் சீ.ம.ரமேஷ் கர்ணா, தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரன் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
மேலும் மாவட்ட செயலாளர் ஆட்சியரிடம் பேசும் போது பெல் அருகாமையிலுள்ள மேட்டுத்தெங்கால் பகுதியில் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு சில அதிகாரிகள் ஏற்பாட்டின் பேரில் இலவச இரவு பள்ளி நடத்தி வருகிறோம் சமீப காலமாக அங்கே துவக்க பள்ளியில் மாணவர்கள் படிப்பதற்கு அதிகாரிகள் இடமலிக்க மறுக்கிறார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் இதற்கு நடவடிக்கை எடுத்து மாணவர்கள் படிக்க வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் இந்த நிகழ்வு போது 100க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக