கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்புக்கு அருகே மிராளூர் கிராமத்தில் சேத்தியாத்தோப்பு நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் செயல்படுவதற்கும் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் வளர்ச்சிக்கு அந்த இடத்தில் வணிக வளாகம் அமைத்து வியாபாரிகளுக்கு மாத வாடகையின் பேரில் வியாபாரம் செய்வதற்கு கடை அமைத்துக் கொடுக்கவும் வேண்டி ஆலோசனை செய்யப்பட்டு இடம் வாங்கப்பட்டிருக்கிறது.
இந்த இடம் சேத்தியாத்தோப்பு குருக்கு ரோட்டிற்கு அருகே உள்ள மிராளூர் எல்லையில் விருத்தாசலம்- சிதம்பரம் முக்கிய சாலையில் அமைந்துள்ளது. இந்த இடத்தில்09/08/2023 புதன்கிழமை காலை10.30 மணிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ எம் விக்ரம ராஜா கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். வியாபாரிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்றும், போதை தரும் புகையிலை வகைகளை விற்பனை செய்வதை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகளுக்கு வேண்டுகோள் வைத்துப்பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ எம் மகாராஜன் தலைமை ஏற்க, கௌரவத்தலைவர் சி. கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை யாற்றினார். கடலூர் மாவட்டதமிழ்நாடு வணிகர் நலவாரிய உறுப்பினர் டி.சண்முகம் முன்னிலை வகிக்க, கடலூர் மாவட்டச் செயலாளர் V.வீரப்பன், கடலூர் மாவட்ட வணிகர் நலவாரிய உறுப்பினர் எஸ் கே கருணாநிதி மற்றும் துணைத் தலைவர் கிஷோர் குமார்,செயலாளர் ஆனந்தன், பொருளாளர் முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இறுதியாக சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் லயன்.டாக்டர். ஆர். மணிமாறன் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி நிறைவுற்றது. இதில் சேத்தியாத்தோப்பு நகர வியாபாரிகள் மற்றும் நிர்வாகிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக