வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் சார்பில் கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் சார்பில் கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம்

குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் சார்பில் கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.




வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கமும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை குடியாத்தம் வேதாந்தா இன்ஸ்டிட்யூட் ஆஃப் அலைடு ஹெல்த் சயின்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் பொது மருத்துவ முகாம் இன்று (13.8.2023) சந்தப்பேட்டை வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகர லயன்ஸ் சங்க தலைவர் டி.கமலஹாசன் தலைமை தாங்கினார் செயலாளர் எம்.முருகதாஸ் பொருளாளர் டி.அரிகிருஷ்ணன் லயன்ஸ்சங்க வட்டாரத்தலைவர்வக்கில் என்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுசிறப்பு அழைப்பாளர் பன்னாட்டு லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் ஆசிரியர் சி. புவனேஸ்வரி லயன்ஸ் சங்கமாவட்ட அவை பொருளாளர் எம்கே. பொன்னம்பலம் லயன்ஸ் எல்சிஐஎப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் என். வெங்கடேஸ்வரன்ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர் மருத்துவ முகாம் காலை 8 மணிமுதல் முதல் மதியம் 3 மணி வரை நடைபெற்றது இதில் 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனை ரத்தசோகை ஹீமோகுளோபின் அளவை கன்டறிதல் சர்க்கரைநோய் கண்டறிதல் தொடர்ச்சியான தலைவலி கண் புறை கண்டறிதல் கிட்ட பார்வை தூர பார்வை நீர் அழுத்தம் ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் ஆலோசனைகள்
வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின மாவட்ட அவை பொருளாளர் எம்கே. பொன்னம்பலம் மண்டல தலைவர் சின்னப்பையன் வட்டாரத் தலைவர் சுந்தரம் முன்னாள் மண்டல தலைவர் காசி விஸ்வநாதன் மாவட்ட தலைவர்கள் விவேகானந்தம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சுரேஷ்குமார் ஜெ. பாபு மற்றும் சமூக ஆர்வலர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad