திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.  இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.470-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 54 சுங்கச்சாவடிகளுடன் புதிதாக சில சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 


இவற்றில், குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதியும் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. நடப்பாண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதி (இன்று நள்ளிரவு) முதல் அமல்படுத்தப்படுகிறது. 


அதன்படி, திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.  குறிப்பாக, மதுரை-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர பழைய கட்டணம் ரூ.85-ல் இருந்து ரூ.90 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.125-ல் இருந்து ரூ.135 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2 ஆயிரத்து 505-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 740 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.145-ல் இருந்து ரூ.160 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.220-ல் இருந்து ரூ.240 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.4 ஆயிரத்து 385-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


இதேபோல் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர கட்டணம் ரூ.290-ல் இருந்து ரூ.320 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.440-ல் இருந்து ரூ.480 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.8 ஆயிரத்து 770-ல் இருந்து ரூ.9 ஆயிரத்து 595 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.470-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருமுறை சென்றுவர கட்டணம் ரூ.705-ல் இருந்து ரூ.770 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.14 ஆயிரத்து 95-ல் இருந்து ரூ.15 ஆயிரத்து 420 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 


இதேபோன்று பிற சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் தூரத்துக்கு தகுந்தவாறு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/