வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு வட்டாட்சியர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சரவணன் வரவேற்றார் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராஜேஷ் குமார் வனத்துறை அலுவலர் மாசிலாமணி தோட்டக்கலை அலுவலர் தமிழரசி நகராட்சி சுகாதார துறை அலுவலர் பிரபுதாஸ் வருவாய் ஆய்வாளர் பலராமன் பாஸ்கர் நகர கிராம நிர்வாக அலுவலர் சபரிமலை வேளாண்மை துறை அலுவலர் உமா சங்கர் வட்டாரப் போக்குவரத்து துறை கஸ்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.
சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சரவணன் அவர்கள் கூறுகையில் தற்போது கல்வி உதவித் தொகை 6 நபா்களுக்கும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விபத்து நிதியாக இரண்டு நபர்களுக்கு வழங்கப்பட்டது், அனைத்து கிராமங்களிலும் ஆடு மாடுகளுக்கு கொட்டகை அமைத்து தர வேண்டும், ஏரி கால்வாய்களை தூர் எடுக்க வேண்டும்.
அனைத்து ரேஷன் கடைகளிலும் கோதுமை வழங்க வேண்டும் இதற்கு அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதாக வட்ட வழங்க அலுவலர் கூறினார். தோட்டக்கலை அலுவலகத்தில் மா செடிகள் கொய்யா சீதாப்பழம் செடிகளை ஆதார் அட்டை கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்
கூட நகரம் ஏரி கால்வாய் தூர் வரவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர் இதற்கு நடவடிக்கை எடுப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறினார்கள். குடியாத்தம் கேவி குப்பம் பேரணாம்பட்டு ஆகிய பகுதியிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக