சேத்தியாத்தோப்பு அருகே நான்கு வழிச்சாலையில் நடக்கும் விபத்துகளைத் தடுக்க மேம்பாலம் அமைக்க கோரிக்கை. இன்றுபுவனகிரி எம்எல்ஏ ஆய்வு செய்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

சேத்தியாத்தோப்பு அருகே நான்கு வழிச்சாலையில் நடக்கும் விபத்துகளைத் தடுக்க மேம்பாலம் அமைக்க கோரிக்கை. இன்றுபுவனகிரி எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஆனைவாரி ஊராட்சிப்ர பகுதியில் தஞ்சை-விக்கிரவாண்டி நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிராமத்தின் வழியாக செல்லும் நான்கு வழிச் சாலையில் சாலையை  கடப்பதற்கு உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என ஆனைவாரி ஊராட்சி உள்ளிட்ட பல கிராம மக்கள் போராடி வருகின்றனர். 


இதனையறிந்த கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சாலை விரிவாக்க பணி நடைபெறும் பகுதியில் கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பல்வேறு வாகனங்கள் விபத்தின்றி சாலையைக் கடப்பதற்கு மேம்பாலம் உடனடியாக அமைத்து  தரவேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். 


இந்த ஆய்வின் போது ஆனைவாரி ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி அண்ணாதுரை, புவனகிரிஒன்றிய பெருந்தலைவர் சி.என். சிவப்பிரகாசம், ஊராட்சி செயலர் ஜெயசீலன், முன்னாள் நகரச் செயலாளர் எஸ் கே நன்மாறன், சாமிநாதன், கே பி ஜி கார்த்திகேயன், அண்ணாபிரபாகரன், சங்கர், ஜபருல்லா, மகேந்திரன், திலீபன். அரங்கப்பன், செல்வகுமார், ஹக்கீம் மற்றும் சில நிர்வாகிகளும் ஆணைவாரி கிராமத்தினரும் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad