திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் வேடசந்தூர் அரசு மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் வேடசந்தூர் அரசு மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டது


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தமுத்துப்பட்டி பூனைக்கல்மேடு என்ற இடத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது. இதில் தமுத்துபட்டியை சேர்ந்த நகைக்கடை தொழிலாளி கவியரசு (வயது 21) என்பவரும் முத்துபழனியூரை சேர்ந்த நிதி நிறுவனத்தில் பணியாற்றும் ஈஸ்வரன் (32) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரையும் மீட்ட கவியரசன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அவசர சிகிச்சை பிரிவின் கண்ணாடிகள் மற்றும் குழந்தைகள் வார்டில் இருந்த கண்ணாடிகள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர். இதனால் மருத்துவ பணியாளர்கள் அலறி அடித்து ஓடினர் அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகள் அச்சத்தில் உறைந்தனர். அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தாக்கியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் வேடசந்தூர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad