மதுரையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் PTR பழனிவேல்தியாகராஜன். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

மதுரையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் PTR பழனிவேல்தியாகராஜன்.


மதுரை மாநகராட்சி தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். 


மதுரை மாநகராட்சி தத்தனேரி திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை,  மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் ஆகியோர் முன்னிலையில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்,  (11.08.2023) வழங்கினார். 


மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளுக்கு 2023 ஆம் ஆண்டுக்குரிய தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி  இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, காக்கைபாடினியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழங்காநத்தம் நாவலர் சோமசுந்தர பாரதியார்  மேல்நிலைப்பள்ளி   ஆகிய பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் 1098 மாணவ, மாணவி களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள்  வழங்கப்பட்டுள்ளது. 


தொடர்ச்சியாக, தத்தனேரி திரு.வி.க.மாநகராட்சி பள்ளி 120 மாணவர்களுக்கும், 75 மாணவிகளுக்கு என, மொத்தம் 195 மாணவ, மாணவிகளுக்கு  தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை, அமைச்சர்  வழங்கினார்.  மேலும்,  போதைபொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியினை அமைச்சர், தலைமையில் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். மேலும், இப்பள்ளிக்கு தேவையான தளவாட சாமான்கள்  அமைச்சரால், வழங்கப்பட்டது. 


இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இசக்திவேல் மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, கல்விக்குழுத் தலைவர் இரவிச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, கல்வி அலுவலர் நாகேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், தலைமை ஆசிரியர்கள்,  ஆசிரியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad