கோவில்களில் நாளை மகா சங்கடஹர சதுர்த்தி விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 செப்டம்பர், 2023

கோவில்களில் நாளை மகா சங்கடஹர சதுர்த்தி விழா.


கோவில்களில் செப்டம்பர் 3- ஆம் தேதி ஞாயிறு  மாலை, மகா சங்கட சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கோவில்களில், மாதந்தோறும் சங்கட சதுர்த்தி விழா விநாயகருக்கு நடத்தப்படுவது வழக்கம். அன்றைய தினம் விநாயகருக்கு பக்தர்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சர்க்கரை பொங்கல் கொழுக்கட்டை போன்ற பிரசாதங்கள் படைக்கப்படுவது வழக்கம்.
 

ஆவணி மாதம் வருகின்ற  வளர்பிறை சதுர்த்தி ஆனது மகா சங்கட சதுர்த்தி என அழைக்கப்படும். இந்த சதுர்த்தியானது, விநாயகர் சதுர்த்திக்கு ஒப்பானது என, பக்தர்கள் கூறுகின்றனர். மகா சங்கட சதுர்த்தி அன்று கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அருகம்புல் ,எருக்களை மாலை அணிவித்து பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு என ஆன்மீகர்கள் கருதுகின்றனர். மதுரை மாவட்டத்தில், பல கோயில்களில் மகா சங்கடத்தில் விழா கொண்டாடப்படுகிறது.


மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம், வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயம், வர சித்தி விநாயகர் ஆலயம், சர்வேஸ்வரர் ஆலயம், ஆவின் பாலவிநாயகர் ஆலயம், மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோவில், கருப்பாயூரணி ஒத்தப்பட்டி விநாயகர் ஆலயம், திருமங்கலம் மீனாட்சி திருக்கோவில், துவரிமான்  மீனாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளிட்ட கோயில்களில், ஞாயிற்றுக்கிழமை மாலை விநாயகருக்கு சிறப்பு அபிஷே அர்ச்சனைகள் நடைபெறும். இதை அடுத்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/