அறுவடைக்கு தயாரான கரும்பு வயலில் நோய் தாக்குதல் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் வேறு வழியின்றி டிராக்டரைக்கொண்டுகரும்புகளை அழிக்கும் விவசாயி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 செப்டம்பர், 2023

அறுவடைக்கு தயாரான கரும்பு வயலில் நோய் தாக்குதல் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் வேறு வழியின்றி டிராக்டரைக்கொண்டுகரும்புகளை அழிக்கும் விவசாயி

அறுவடைக்கு தயாரான கரும்பு வயலில் நோய் தாக்குதல் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் வேறு வழியின்றி டிராக்டரை கொண்டு கரும்புகளை அழிக்கும் விவசாயி


 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மேல் வளையமாதேவி கிராமத்தில் விவசாயிகள் பலர் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கரும்பு வயல்கள் நோய் தாக்குதல் ஏற்பட்டு தற்போது அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேளாண்மை துறை மற்றும் கரும்பு அலுவலர்கள் பரிந்துரைத்த விதைக்கரும்பு ,உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை பயன்படுத்திதான் கரும்பு விளைவிக்கப்பட்டதாக விவசாயி கூறுகிறார். ஆனாலும் அவர்கள் பரிந்துரைத்ததை பயன்படுத்தியும் கரும்பில் மஞ்சள் நோய் மற்றும் பல்வேறு நோய்கள் தாக்கியுள்ளது 
நோய் தாக்கிய கரும்புக்காக அதிகாரிகள் கூறும் எந்த விளக்கமும் தெளிவாக இல்லை என்று வேதனை அடைந்த பல விவசாயிகளில் மணிவாசகம் என்ற விவசாயி தான் கஷ்டப்பட்டு விளைவித்தகரும்பு வயலை டிராக்டர் கலப்பைகொண்டு உழவு ஓட்டி அழித்தார். இவர் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து கிட்டத்தட்ட எட்டு லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறுகிறார்.



மேலும் பாதிப்படைந்துள்ள விவசாயிகள் கூறும் போது அதிகாரிகள், நோய் தாக்கிய கரும்புக்கு விளக்கம் மட்டுமே சொல்லி வருவதாகக்கூறி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், கரும்பை அழித்து விட்டதால் மறு சாகுபடியான
சம்பா சாகுபடிக்கு தேவையான விதை,உரம் போன்றவற்றை இலவசமாக வழங்க வேண்டும். முக்கியமாக கரும்புக்கு பயிர் காப்பீடு செய்ய வேண்டும் எனவும் வேதனையுடன் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/