சூரங்குடி - கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 அக்டோபர், 2023

சூரங்குடி - கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது.

தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது.


சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த தர்மா மகன் லிங்கம் (47) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெற்றிவேல் மகன் செல்வகுமார் (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.


இந்த முன்விரோதம் காரணமாக நேற்று (30.09.2023) மேற்படி லிங்கம் வேம்பார் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செல்வகுமார் லிங்கத்திடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


இதுகுறித்து லிங்கம் அளித்த புகாரின் பேரில் சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து வழக்குபதிவு செய்து மேற்படி எதிரியான செல்வகுமாரை கைது செய்தார். மேலும் இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி செல்வகுமார் மீது ஏற்கனவே சூரங்குடி காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்கு உட்பட 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad